Wednesday, 15 July 2009

சுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (1)சுவடுச் சரம் - 1

நினைவுத் துளிகள் (1)

-குணன்-


முற்குறிப்பு:

தோரணத்தில் புதிய தொடராகப் பதிவுறுகிறது நடந்துவந்த பாதையின் நினைவுச்சுவடு. இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் பெருமளவில் அகதிகளாகவெளியேறத் தொடங்கிய 80களின் ஆரம்பத்தில், இலண்டனும் - ஆங்கிலமும்தவிர்ந்த ஏனைய நகரங்கள் - மொழிகள் பற்றி பெரிதும் அறிந்திராத ஈழத்தமிழர்கள் பரவலாக பூமிப் பந்தில் பரவிய குடிப்பரம்பலுக்கு அச்சாணியாகத்திகழ்ந்தது பேர்லின் நகர்தான். அப்போது கிழக்கு - மேற்கு எனப் பிளவுண்டிருந்தஇந்த நகருக்கூடாகத்தான் ஐரோப்பாவின் அகதிகளாக ஈழத்தமிழரின்முதற்தலைமுறை தடம் பதித்தது. இந்த ஆரம்பகால நினைவுகளை மீட்டுசொட்டுச் சொட்டாக துளிரிடுகிறார் குணன். வாசகர்களின் கருத்துகளால் தனதுஇப்பதிவிடல் மெருகூட்டப்படுமென ஆவல் கொள்கிறார்.

இதைப் புகலிடப் பதிவாக்கிய தோரணம் 'சுவடுச் சரமாக'த் தொங்கவிடுகிறது. இப்பதிவு வாசகர்களின் நினைவுகளைத் தூண்டி இவ்வாறாக இன்னும் பலபதிவர்கள் பதிவிட முன்வரும் உந்துதல் கிட்டிடவேண்டுமென்பதே தோரணத்தின்அன்பான எதிர்பார்ப்பு.


0000000000

நினைவுத் துளிகள் (1)

- -குணன்-

என்னுள் சிலிர்த்தெழும்புகின்ற சில நினைவுத் துளிகளை வரிகளாக்கித் தந்துதோரண வாயிலில் தொங்கவிடலாம் என முன்வந்திருக்கிறேன்.

உருண்டோடிவிட்ட மணித்துளிகள், நாட்கள், மாதங்கள்.... ஏன் வருடங்கள் எனஒன்றாகி, காலத்தின் பாதையில் புலப் பெயற்சியில் கழிந்து போன கணக்கில்இழந்துள்ள காலம் இதுவரை முப்பதாண்டென்று கூற சரியாக 2010 யூலை 11ம்நாள் வரையில் காத்திருக்க வேண்டும்! வெளிநாட்டுச் செல்ல, அன்று, 1980ல், எல்லோரையும் போல,“வெளிநாட்டு ரேகை உண்டென்று" நல்லூச் சாத்திரிஅடித்துக் கூறியதானது பணத்தை புரட்ட வழிகாணச்செய்து பயண ஏற்பாடுகளைகளை கட்டியது!

தாயாரும், உறவுமுறையினரும் மிளகாய்த்தூள்,எள்ளு உருண்டை,கோப்பித்தூள்,பருத்தித்துறை வடை எனப் பொதி செய்ய நண்பன் காராளியும் நாலைந்துசபாரி, கோர்ட்டையும் (டுங்கொள-இது புகையிலைக்கு சிங்களம்!), 'டை' யையும்கொண்டுவந்து தந்தான். 60களில் "டை" தொங்கவிடும் அங்கிள்மாரைக் கண்டால்கல்லூரி மாணவர்கள், கிரிக்கட் மைதானங்களில் கேலிசெய்வதைக் கேட்டுச்சிரித்ததுண்டு! குறித்த அந்த கிரிக்கட் போட்டி, மேற்கிந்திய அணிக்கும்-இலங்கைஅணிக்கும் இடையில், இடம் பெற்றதும், மேற்கிந்திய அணிக்கு உலகப்புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் - பின்னாளில், சேர் பட்டம் பெறறு, பிரபுவாக விளங்கிய சேர்கரிசோபர்ஸ், தலைமை தாங்கி விளையாடிய காட்சி நினைவில் மலர்கிறது.

பயணம் நெருங்க, பதட்டம் அதிகரிக்க கப்பல், வெளிநாடு, என்று ஆரவரித்துஇரவோடு இரவாக, கடன், ஈடு, ஒற்றி, அ டைவு, இப்படியாகப் பணத்தை திரட்டி, ஏஜண்ட்டுக்கு கொடுக்க, வெளிநாட்டுப் பயணம் உறுதி பெற்றது. 10.07.1980 அன்றுமாலையில், யாழ்ப்பாணம் வெலங்டன் தியேட்டரில் இருந்து புறப்பட்டசினிமாஸ் குளு குளு பஸ் மூலம் 11.07.80 ல் தலைநகர் சேர்ந்தது, உடன்பிறப்புக்கள், உறவினர், விடைகூற, முதல் முறையாக விமானம் ஏறி, எங்கே?, ஏன்?, எதற்கு? என எதுவுமே தெரியாது, எல்லோரும் ஏறினார்கள் எனநாமும் ஏறிக்கொண்டோம்.. தாஸ்க்கண்ட்(வழியாக) மோஸ்கோ வந்தடைந்துவிமானம். அன்றே, அடுத்த விமாத்தில் ஏறி கிழக்கு ஜேர்மன் தலைநகர் கிழக்குபேர்லின் அடைந்தோம்! நண்பனும் நானும் மற்றும் பல தமிழ் இளைஞர்கள்கூடவே வந்தார்கள்!

கடப்பு பாய்ந்து , பப்பாவின் தென்னந்தோட்டத்தில், இளநீர் பறித்ததும், கந்தையரின் மரவள்ளித் தடி இழுத்து, காட்டுத் தரவையில் கொண்டு போய், பள்ளித்தோழர்கள் ஒன்று சேர, சுட்டு, வழுக்கல் தேங்காய் - முட்டுக்காய்த்தேங்காய் எனத் தரம்பிரித்து தீர்த்துக்கட்டிய அனுபவங்கள் நிறைய இருந்த, நம்மில், பேர்லின் எல்லை(கடப்பு)யைத் தாண்டுவதைக் கேட்டதும், எல்லோருக்குமே 'குலை நடுக்கம்' (எது என்று மட்டும் கேட்காதீர்கள்!) ஆனாலும், உள்ளங்கால் தொட்டு உச்சிவரை, தந்தி அடிக்கத்தொடங்கிவிட்டது என்பது, ஏதோமறுக்கவோ மறக்கவோ, மறைக்கவோ முடியாத யதார்த்தந்தான்! எல்லோரும், அன்று எல்லோருக்கும் நன்கு அறியப்பட்ட, வெளிநாட்டுப் பயணப்பொதிகளை(சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில்) சபாரி-பெல்ஸ்சுடன், தோள்களில் மாட்டிய தோற்றத்தில்(சுரங்கப் பாதைவழி) மாலைமணிக்குள் மேற்கு பேர்லின்பகுதிக்குள் சேரா விட்டால், தண்டனையுடன், கம்யுனிஸ்ட் இராணுவப் பொலிசாரினால் வலுக்கட்டாயமாக எல்லையில்கொண்டு செல்லப்பட்டு, மேற்கு பேர்லினுக்குள் தள்ளப்படுவார்கள் என்பதைஎமக்குதவிய பெண்ணொருவர் எடுத்துக்கூறியதை நினைத்துப்பார்க்காமல்இருக்க முடியாது!

அன்றைய தமிழ் பயணிகளில், வயதில் முதிர்ந்த-ஆங்கிலம் புரியக்கூடிய, ஓரிருவர்களில், நானும் ஒருவன் என்பதால், நாற்பதின்மர்(ஏறக்குறை)களும், என்னையும், மற்றொரு பெரியவரையும் சுற்றிக்கொண்டு, "அண்ணே,அண்ணே!“ என்று, தாய்ப் பசுவைச் சுற்றி வரும் கன்றுகளைப்போல, கெஞ்சியதை, எண்ணி, எண்ணி வேதனை கொண்டதற்கு,“தோரணை“ அரங்கமைத்துள்ளதையும்கூறிவைக்க விரும்புகிறேன்! எங்கள் பயணத்தின் முடிவு அல்லது சேருமிடம்( எங்கள் பயண முகவர் அன்று தந்த முகவரி) அதிக தூரமில்லைத்தான், ஆனாலும்அங்கு, அந்த முகவரி, பேர்லின் செஞ்சிலுவைச் சங்க நிர்வாகத்தில் நடைபெற்றபல்லின அகதிகள் தங்கும் விடுதி'யின் முகவரி எனத் தெரிந்து கொண்டோம்! பேர்லின் மிருகச்சாலைக்கு பக்கத்திலிருக்கும், "சுலொஜிஸ கார்டன்ஸ்“ என்றபெயரைக் கண்டதும், அங்கு இறங்குமாறு, அறிவுறுத்தியபடி, இறங்குமாறு கூறி, பத்து வண்டிகளில் (வந்தவர்கள் அனைவரும்) செஞ்சிலுவைச் சங்க விடுதியின், முன்பு யாழ்நகர்-பேர்லின் பயணம் முற்றுப்பெற்றதாயினும், புகலிடத்தமிழர்களின் ஆதாரசுருதியாக விளங்கியது மட்டுமல்லாது, அந்ததொடக்க காலத்தில், சுரங்கப்பாதை வழியாக,1985 ஆடி 15ம் நாள் வரை, கிழக்குபேர்லின் நுழைவு அனுமதியாக்கப்படும் வரை, பன்னாட்டவருடன், ஈழத்தமிழன்இன்று, பரந்து-இணைந்து வாழ வழிகாட்டியது. இந்த ஆகா பேர்லின் அழகுமட்டுமல்ல - அதன் உள்ளமும் தான் !!
-
(துளி சொட்டும்……)
14. 07. 2009

1 comment:

  1. சொட்டுச் சொட்டாய்ச் சொட்டட்டும் தேங்கிக்கிடக்கும் அனுபவத் தேட்டம்.

    ReplyDelete