Friday 29 May 2009

செய்திச் சரம் -1 தமிழுக்கு கோயில்!

திண்டுக்கல் அருகே
தமிழுக்கு கோயில்!

இணைய உலாவரும்போது புதிதாய்க் காணப்பட்ட இச்செய்தியால் ஈர்க்கப்பட்டேன். தமிழுக்குக் கோயில் - எதிர்காலத்தில் தமிழின் இருப்பை நிலை கொள்ள வைக்க இது தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் அமைக்க வேண்டிய பொருத்தப்பாடு காணப்படுவதாக உணர்வதால் மீளப்பதிவிடுகிறேன்.

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மூலவராக தமிழன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

முத்தமிழ் அரங்கம், பெரு நூலகம், இலவச சித்த மருத்துவ நிலையம், தமிழ் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்படும்.

தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும். ஆனால், மத அடிப்படையில் எந்த வழிபாடும் நடத்தப்படமாட்டாது.

ஆண்டுதோறும் பொங்கல் அன்று செங்கரும்பு பந்தலிட்டு தமிழர் திருநாள் கொண்டாடப்படும். திருவள்ளுவர் தினத்தன்று தமிழுக்கு தொண்டாற்றிய சான்றோர்களுக்கு நினைவுத்தூண் மூலம் போற்றல் நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழ் விழாக்கள், பொதுநல விழாக்கள், ஏழை வீட்டு திருமணங்கள் இலவசமாக நடத்தப்படும்.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். புதிய தமிழ் இலக்கிய படைப்புகள் அரங்கேற்றப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் நடக்கும் என்றார்.

உலகத்தில் மொழி்க்கு என்று கோயில் கட்டப்படுவது தமிழகத்தில் தான். அதுவும் தமிழுக்குத்தான் என்பது குறிபிப்பிடதக்கது.


நன்றி: தட்ஸ்தமிழ் -செவ்வாய்க்கிழமை, மே 26, 2009, 10:14 [IST]
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0526-temple-for-tamil-annai-in-sinnalapatti.html

3 comments:

  1. மக்கள் நேசிப்பதற்கு எதிராக அடக்குமுறையாளர்களால் எது நசுக்கப்படுகிறதோ அது கோவிலாகி பாதுகாப்புக்குள்ளாவது வரலாற்று நியதி போலும். தமிழ் கோவிலாவது தமிழால் ஒன்றுபடுவதற்கான உணர்வினைக் கொடுக்கலாம். குருட்டுப் பக்தியில்லாது இவ்வகைக் கோவில்கள் உருவாகுவது புலம் பெயர் தேசங்களில் வாழும் எதிர்காலச் சந்ததியினருக்கான அடையாளத் தக்க வைப்பிற்கு ஊக்கமளிக்கலாம்!
    - நல்ல சிந்தனை.

    ReplyDelete
  2. ஓ! முகிலா நீரும் ஈழத்தவர்தானோ! அருமையான பதிவு! தமிழ்த்தாய்க்கும் ஒரு கோவில் மனநிறைவைத் தருகிறது! பதிவுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. வணக்கம் தங்க முகுந்தன்!
    புலம்பெயர் தேசங்களில் நம் சந்ததியினரின் அடையாளத் தக்கவைப்பிற்கு இவ்வகைக் கோயில்கள் தேசங்களுக்கொன்றாக உருவாக்கப்பட்டு மைய நாட்டுடன் தொடர்புடையதாக இயங்குதல் நல்லது.

    ReplyDelete