Wednesday, 25 December 2013

பிரான்சில் தமிழரின் இசைத் தொன்ம அடையாளத்தை வெளிப்படுத்தும் 'பறை'

பறை - பறை

பறை எமது இசைத் தொன்மச் சான்றாக கவனம்கொள்ள வைக்கும் கருவி. இதனால் வெளிப்படுத்தப்படும்  பேரொலி மொழி கடந்ததாக உலகத்தவர்களை திரும்பிப்பார்க்க வைக்கும் தனிச்சிறப்பையும் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 19.01.2013 அன்று பாரீசு நகரில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் - தமிழர் திருநாள் நிகழ்வில் சிறப்பு இசையரங்கமாக பறையாட்டம் இடம்பெறவுள்ளது. புலம்பெயர்வு வாழ்வில் பிரான்சில் முதற் தடவையாக அரங்க நிகழ்வாகிறது பறையாட்டம். எமது மூதாதையினர் தந்தளித்த  தொன்ம இசைக் கருவியின் அதிர்வுகள் காற்றில் பயணித்து மொழி கடந்ததாக பல்லினச் செவிகளுக்குள் நுழைந்து தமிழரின் தனித்துவத்தைப் பறையும்.

1) பறை (இசைக்கருவி)
ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது."பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி' என முனைவர் வளர்மதி தன்னுடைய "பறை' ஆய்வு நூலில் விளக்குகிறார்


2.) பறை எனும் சொல் 
ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் பறை எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பயன்பாடுகளும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

3.) பறை ஆட்டம் அல்லது தப்பாட்டம் 
என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் எனக் கருதப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது. தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள்.
எனவாக விக்கிபீடியா பதிவுசெய்துள்ளது. பறை தொடர்பான காணொலிப் பதிவை மேலதிக புரிதலுக்காக கீழே இணைக்கிறேன்.
4.) புலம்பெயர்வு வாழ்வில் 'பறை'யின் வகிபாகம்
பாரீசில் நடந்த பயிற்சிப்பட்டறை அடுத்த தலைமுறையினரின் உற்சாகமான ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. எமது அடையாளத்தை தகவமைக்கும் தேடலுடனாகத் தொடரும் புலம்பெயர்வு வாழ்வுவின் நீட்சியில்  'பறை' முக்கியமானதொரு வகிபாகத்தை எடுக்கப்போகிறது.00000 00000

பின்னிணைப்பு: 

வீட்டிலிருந்தவாறே தமிழரின் தொன்ம் இசைக் கருவியான பறையை இலகுவாகக் கற்றுக் கொள்ள பின்வரும் இணைப்புகளுடன் தொடரலாம்

அமெரிக்காவில் முறையாகப் பயிற்றப்பட்ட  'பறை' பட்டறையின் பதிவைக் காண்க:


பிற்குறிப்பு: 

இணைய வலையூடாகத் தொடரும் எனது பகிர்வு சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்தது. புலம்பெயர்வு வாழ்வில் பல பணிகளை மேற்கொள்ள எத்தனிக்கும்போது சிலவற்றைத் தொடர முடியாது போகிறது. என்னை அனைவரும் மன்னிக்க வேண்டும்.
எதிர்வரும் 19.01.2014 ஞாயிறு அன்று பிரான்சு சிலம்பு சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாக 'புலம்பெயர் தமிழர் திருநாள்' நிகழ்வு நடக்கவுள்ளது. இதுவரைகாலமும் பாரீசு புறநகரத்தில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு பாரீசு நகரத்தினுள் முதற்தடவையாக இடம்பெறவுள்ளது.
சென்னையிலிருந்து வெளிவரும் ‘காக்கைச் சிறகினிலே’ மாத சஞ்சிகை (சனவரி 2014) « தமிழர் திருநாள் » சிறப்பிதழாக வெளிவருகிறது.
தொடர்பு முகவரி :
காக்கை, 288 டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005


நன்றி : விக்கிபீடியா மற்றும் யூ ருயூப்
இணைப்பு : முகிலன் 20.12.2013


4 comments:

 1. i really appreciate, what you doing. great job

  ReplyDelete
 2. நல்ல முயற்சி. நிகழ்ச்சி பூரண வெற்றியடைய வாழ்த்துகிறேன். கட்டாயம் நிகழ்ச்சிக்கு வருகை தர முயற்சிப்பேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி! நிகழ்வில் தங்களது பங்கேற்பை இன்முகத்துடன் வரவேற்கிறோம்.

   Delete