குஞ்சரம் 8
இலக்கியச் சந்திப்பு
-மௌனம்
இதழில் இடம்பெற்ற அன்றைய பதிவு மீளவும் அசைபோடப்படும்போது-
சாலை
ஓரத்தில் அமைந்த அந்த சிறிய பூங்கா. ரம்மியமான மாலை நேரங்களில் அதில் நிமிர்ந்து
நிற்கும் மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'வாங்கில்' (bench) அந்த இலக்கிய நண்பர்கள்
அடிக்கடி கூடி பல்வேறு சிந்தனைகளை அலசுவது வழக்கம்.
சாலையின்
மறுபுறத்தில் ஒரு சம்சாரியின் குடும்பம் முழுமூச்சாக வியாபாரத்தில் ஈடுபடும்
செருப்புக் கடை. சாலையில் மாலை நேரச் சிற்றுண்டிச் சேவை நடாத்தும் மணியனுக்கு இந்த
இரண்டு பிரிவினரும் வாடிக்கையாளர்கள்.
ஏனோ
மணியனின் சிந்தனையில் விசித்திரமானதொரு கேள்வி 'இவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர்
என்ன நினைப்பார்கள்?'
இலக்கியப்
பெருமகன் : 'பாவம்
சம்சாரி! தன்னையோ சமூகத்தையோ உணரமுடியாத சடம் போல் இந்த சீர்கெட்ட சமுதாயச்
சாக்கடையில் உழண்டு கொண்டிருக்கும் அப்பாவி!'
சம்சாரி : 'வேலை கெட்டதுகள். வெட்டிப்
பொழுதுபோக்கிக் கொண்டு நாட்டையே நாசமாக்கப் போகுதுகள்!'
- பயஸ்
**********************
நன்றி : மௌனம் 3(காலாண்டிதழ்) -
நவ- டிச -'93 ஜன '94 (பிரான்சு)
குறிப்பு : நாங்கள் பாரீசு
வந்தபோது நடாத்திய காலாண்டிதழ் 'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது.
- முகிலன்
பாரீசு 24.07.2013
No comments:
Post a Comment