சலனச் சரம்1
- குத்துவிளக்கு -
இலங்கையில் தமிழ்த்திரைக் கலையை நிலைநிறுத்தப் பாடுபட்டவர்களை இன்று நினைத்துப் பார்க்கும்போது ஒரு கணம் மலைப்புடன்தான் மதிக்க முடிகிறது. இவர்கள் எதிர்நீச்சலுடன்தான் பயணித்திருந்தார்களென்பதை வரலாற்றிலிருந்து நீக்கவே முடியாது.
ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் புலம்பெயர்ந்த நிலையில் தொடரும் வாழ்வின் பிளவுப் பயணத்தில் இவர்கள் விட்டுச் சென்ற காணொலிப் பதிவுகள் இன்று ஆவணத் தடங்களாகி புதிய பரிணாமத்தைத் தருகின்றன.
இன்று எம்மவரிடம் இல்லாதுபோய்க் கொண்டிருக்கும் நமது வாழ்வுடன் இணைந்திருந்த உயிரினங்களும் உடைமைகளும் உபகரணங்களும் எம்மை நினைவோடையில் இனிமையாகப் பயணிக்க வைக்கிறது.
இன்று எம்மவரிடம் இல்லாதுபோய்க் கொண்டிருக்கும் நமது வாழ்வுடன் இணைந்திருந்த உயிரினங்களும் உடைமைகளும் உபகரணங்களும் எம்மை நினைவோடையில் இனிமையாகப் பயணிக்க வைக்கிறது.
அன்றைய திரைப்படம் இன்று காணணொலி ஆவணமாகி பல்வேறு நினைவுகளைக் கிளறிப் பயணிக்கிறது. பலரும் காணவேண்டும் என்பதற்காக இணைய வலையில் நன்றியுடன் பகிர்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் இவைபோன்ற பல்வேறு தடங்களை விட்டுச் செல்லும் படைப்பாளிகளையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
இயக்குனர் | டபிள்யூ. எஸ். மகேந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | வீ. எஸ். துரைராஜா |
கதை | வீ. எஸ். துரைராஜா |
நடிப்பு | ஆனந்தன் ஜெயகாந்த் லீலா நாராயணன் பேரம்பலம் யோகா தில்லைநாதன் எம். எஸ். ரத்தினம் எஸ். ராம்தாஸ் சிசு. நாகேந்திரா இந்திராதேவி திருநாவுக்கரசு நடராஜன் பரமானந்த ஸ்ரீசங்கர் |
இசையமைப்பு | ஆர். முத்துசாமி |
ஒளிப்பதிவு | டபிள்யூ. எஸ். மகேந்திரன் |
விநியோகம் | வீ. எஸ். ரி. பிலிம்ஸ் |
வெளியீடு | 1972 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
திரைக்கதை | ஈழத்து இரத்தினம்
(மூலம் : விக்கிபீடியா)
|
பாரீசு 16.07.2013 Tweet
No comments:
Post a Comment