Thursday, 25 July 2013

தமிழ் கற்றல்

குஞ்சரம் 9


தமிழ் கற்றல் தமிழ் கற்றல் தமிழ் கற்றல் தமிழ் கற்றல் 

தமிழ் கற்றல்

-மௌனம் இதழில் இடம்பெற்ற அன்றைய பதிவு மீளவும் அசைபோடப்படும்போது-


பிரெஞ்சு பாடம் தீவிரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவன் நான். அவ்வப்போது தமிழில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வேன்.
வழக்கத்திலுள்ள பிரெஞ்சு மொழியை 'மூன்று பிரிவுகளாக' வகுக்கின்றனர்.
1. Standart    - தரம் (வகுப்பறை)
2. Famimier    - வழக்கம் (வீடு - உறவு - நண்பர்  - வட்டாரம் - பிரதேசம்)
3. Soutenu    - பண்டிதம் (இலக்கியம் - அலுவலகம்)
பொதுவான இலக்கண விதிகளுக்கு அமைய நடைமுறையில் பிரெஞ்சின் உச்சரிப்பு - வாக்கிய அமைப்பு - வேறுபாடு என்பன சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
1. தரமான தமிழ்
2. வட்டாரத் தமிழ்
3. பண்டிதத் தமிழ்
இருப்பதை அறிவோம். கல்விக்கூடங்களில் தரமான பாடத்திட்டங்களுடன் ஒப்பீட்டளவில் நடைமுறைத் தமிழையம் சொல்லிக் கொடுக்கும் நிலை வருமாயின் யதார்த்த நிலையின் பரிதல்கள் இலகுவாகுமல்லவா? அது மட்டுமல்லாமல் தமிழில் அகராதிகளின் தேவையும் பயன்பாடும் அதிகரிக்குமல்லவா?
- லிங்கம்
*****************

நன்றி: மௌனம் 4(காலாண்டிதழ்) - பெப்- மார் - ஏப் '94 (பிரான்சு)

குறிப்பு: நாங்கள் பாரீசு வந்தபோது நடாத்திய காலாண்டிதழ் 'மௌனம்' இதில் எனது ஆக்கமாக இடம்பெற்றது. 
அகதிகளாகவும் - குடியேறிகளாகவும் பிரான்சினுள் நுழைந்தோரில் பாடசாலைக் கல்விக்கூடங்களில் நுழையும் வயதெல்லையைக் கடந்தவர்களுக்கு  அடிப்படைச்  சூழல் மொழியறிவைக் கொடுக்கும் முறைசாராக் கல்வி நிறுவனமொன்றில் கற்றுக் கொண்டிருந்தபோது பதிவான குஞ்சரம்.
- முகிலன்
பாரீசு 24.07.2013

1 comment:

  1. புதிய அணுகுமுறையாகப் படுகின்றது. தமிழை எளிய தமிழ், வழக்குத் தமிழ், செந்தமிழ் என பிரித்துக் கற்றுக் கொடுக்கும் நிலையேற்பட வேண்டும். எளிய தமிழ் மாணவர் தமிழை சுமையாக கருதி தள்ளாமல் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டலாம். வழக்குத் தமிழ் மூலமாக மொழிச் சிதைவைக் குறைத்து அதே சமயம் வட்டார மொழியியலின் அழகியலையும் எடுத்துரைக்க வழிவகுக்கும். செந்தமிழை எழுத்து நடையில் எழுதவும், மேல்நிலைகளில் பயில்வோர் ஆய்வுக்கு உட்படுத்தி படிக்கவும் வழிகோலும்.

    ReplyDelete