செய்திச் சரம் 15
அனேகரின் விருப்பதுக்கு அமைய பிரஞ்சுத் திரையில் சிறப்புக் காட்சியாகிறது
சுவிஸிலுள்ள புலம்பெயர்ந்த ஈதத்தமிழரின் திரைப்படம்
கலைஞன் ரமணன் குழுவினரின்
Maaru thadam மாறு தடம்
பாரீசில் எதிர்வரும்
15.09.2013 மாலைக் காட்சியாக திரையிடப்படுகிறது.
15.09.2013 pm
19.30 in France
- MEGA CGR
EPINAY SUR SEINE
அதிகமாக பெண்கள் ஈடுபாட்டோடு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அடுத்த
தலைமுறையினர் தமக்கேயுரியதான சிறப்புகளுடனும் உடல் மொழி இலாவகத்துடனும் திரை வழியில்
சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் காட்சிகள் இலங்கையிலும் சுவிஸிலுமாக
அதிகவளவான பாத்திரங்களுடன் கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் நேர மற்றும்
பொருட் செலவைச் செய்திருக்கும் திரைப்படம். புலம்பெயர்வு ஈழத் தமிழ் நிகழ்கலை அரங்கியலாளனாகிய
ரமணனின் இயக்கத்தில் வெளியானதொரு குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம் இது.
இவருடன் அடுத்த தலைமுறை இளைஞர்கள்
தலைமுறை இடைவெளி இல்லாது இயல்பாக நடிப்பதை இப்படம் தனித்துவ முத்திரையாய்ப் பதிக்கிறது.
ஈழத்தமிழரின்
புலம்பெயர்வு வாழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் திரைப்படமாக்கி
'எம்மால் முடியும்' என்பதாக நிலைநாட்டியுள்ளார்கள் சுவிஸ் வாழ் அடுத்த தலைமுறை இளம்
கலைஞர்கள். இத்தகைய கூட்டான உழைப்பை இப்படக் குழுவினர் நிகழ்த்திக் காடடியதை மனமாரப்
பாராட்டியே ஆகவேண்டும்.
திரையரங்கம் : Cinéma Mega CGR
5 Avenue Joffre,
93800 Épinay-sur-Seine
நம்மவர்
திரைத்துறையை மேம்படுத்த, திரையரங்கத்திற்கு குடும்பமாகச் சென்று எமது இளம் கலைஞர்களை
ஊக்குவிப்போம்!
ஆற்றலாளர்கள்
கவனங்கொள்ளப்படாது அலட்சியப்படுத்தப்படுமானால்
புலம்பெயர்வு தமிழ்ச் சமூகம் என்னும் வரைபுத் தளம் தள்ளாடியே அசைவுறும்.
உலக வாழ்வோட்டத்தில்
தனக்கானதொரு கலையைக் காவிச் செல்லாத சமூகம் முழுமையடையாது.
|
பின்னிணைப்பு:
1. Maaru thadam மாறு தடம்
http://www.youtube.com/watch?v=35065QijrBM#t=213
சுவிஸில் இப்படத்தைப்
பார்த்தவர்களின் கருத்துத் தொகுப்பு
2. Osai Films & Vishny Cine Arts presents:
Maaru Thadam:
Swiss - Artists: Ramana, Meena,
Vithusan, Vishny, Anushanth, Gajan, Geetha, Sairaj, Suki, Balakrishnan, Yaso,
Stefanie, Sanji, Anukshan, Krishna, Anusha, Murali, Thanujan, Inthusan, Machi
Bala, Simone, Ranjini, Baskar, Vijayan, Varathan, Luxan, Thaya, Nivetha,
Nizethan, Viveka, Tharsika, Ovian, Vivetha, Pira, Kausi, Ravi, Ajith, Suganthi,
Sinthuja, Shruthika, Swetta, Mathy, Adian, Oovian, Tharsini, Vithusa, Ranji and
many more.
Jaffna - Artists: Firminus,
Colin, V.T.Arasu, Mano Ranjani, Ninthuja, Mathusa, Thurgga, Kalaithasan, Yugan
France - Artist: A. Ragunathan
Camera: Kiruba, Jasitharan
(Jaffna), Yaso, Sanji
Music: Yathushan, Uthayan
Singers: Nerujan, Geetha,
Uthayan, Yathushan
Choreography: Gajan Kailasanathan
MakeUp: Thaya Logathasan, Andrew
(Jaffna)
Story, Screenplay and Direction:
S.K. Ramanathas
0000 0000
திரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள்- செயலர்கள்
தங்களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப்
பிரக்ஞையுடைய ஆர்வலர்களும்- தனவந்தர்களும்- முதலீட்டார்களும்- ஊடகங்களும் கவனம்கொள்ள
வேண்டிய தருணமிது.
|
- சலனம் முகுந்தன்
நமக்கென்றோர்
நலியாக் கலையுடையோம்!!
பாரீஸ் 04.09.2013
Tweet
No comments:
Post a Comment