Wednesday, 13 February 2013

தைப்பொங்கல் 1996 -நெவே 'ஜெகன் வாசுகி' தம்பதியினர் இல்லத்தில் கூட்டுப் பொங்கலிடும் நிகழ்வு

செய்திச்சரம் 10


தைப்பொங்கல் 1996 -நெவே 'ஜெகன் வாசுகி' தம்பதியினர் இல்லத்தில் கூட்டுப் பொங்கலிடும்
 நிகழ்வாக நடந்தது இந்நகிழ்வு. 

அப்போது எமது குடும்பம் பிரான்சின் மேற்கே அட்லான்டிக் சமுத்திரத்தின் அலைகள் தொடும் கடைசித்தரை Finistère) என விழிக்கும் பிறஸ்ட் என்ற நகரில் வாழ்ந்தோம். இப்படத்திலிருப்பவர்களில் எமது நண்பர்களாக குடும்மாக இணைந்து இந்நிகழ்வில் மகிழ்வுடன் கலந்து கொண்டவர்கள். 'ஜெகன்-வாசுகி' குடும்பம்- மரியண்ணன் குடும்பம்- கிறிஸ்ரி குடும்பம்- தவம் குடும்பம்- ரவி- தேவன்- அருள் குடும்பம்- செல்வி தேவா.... எனவாக சுமார் பதினொரு குடும்ப மற்றும் தனியராக 36 பேர் கலந்து மகிழ்வுற்ற தருணம் இது. எங்களது மூத்த மகன் இளவேனில் 10 மாதக் குழந்தையாகக் குதித்து நடந்த காலம். 

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையான கிறிஸ்ரியின் மகனுக்கு நான் பால் தொட்டுப் பொங்கற் சோறு கொடுத்தேன். இந்நிகழ்வு தொடர்பாக அப்போது நாம் நடாத்திய மெளனம் இதழில் குறிபொன்று பதிவிடப்பட்டிருக்கிறோம். இதில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்பாக இப்போது அறிய ஆவலாகவுள்ளளோம். 

நவே என்ற கிராமத்தின் தகவல்கள்:

http://fr.wikipedia.org/wiki/N%C3%A9vez













மௌனம் இதழில் வந்திருந்த குறிப்பு:

பொங்கல் ஒன்றுகூடல்
"பிரான்சின் மேற்கெல்லையில் கடைசித்தரை என அழைக்கப்பெறும் பினிஸ்தெயர் மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் இவ்வருடப் பொங்கலன்று ஒன்றிணைந்து கொண்டாடினார்கள். கம்பர் நகருக்கண்மையிலமைந்த ஒரு கிராமத்தில் வாழும் திரு ஜெகன் குடும்பத்தினரின் வீட்டு முற்றத்தில் எங்கள் ஓர் நினைவுகளை மீட்டிடும் பொங்கல் அனைவருக்கும் இதமாக இருந்தது. இவர்கள் தங்களை தமிழர் கலாச்சாரச் சங்கமாக இணைத்திடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்."
(மௌனம் -6 சிறப்பிதழ் 1995 - 96)

No comments:

Post a Comment