அன்புப் பரிசுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்!!
காக்கைச் சிறகினிலே- இதழுடன் "லோமியா" நாவல் சந்தாதாரருக்காகவென அன்புப் பரிசாக அனுப்பி வைத்திருந்ததைப் பாராட்டி பகிரப்படுத்தும் உந்துதலே இப்பதிவு.
புவி எங்கிலும் உருவிக் குவிக்கும் உற்பத்திகளை விநியோக -விற்பனையாக்கும் நிறுவனர்களாகவும், கட்புல நுண்மயக்கத் தூண்டலால் கட்டுண்டுள்ள நுகரும் மக்கள் கூட்டமாகவும் புதியதாய் பிளவுண்டுள்ள உலகமயமாக்கல் யுகத்தில் வாழும் 'வாசிக்கும்' கூட்டத்தினர்தானே நாம்.
இன்று புத்தகச் சந்தைகளும் நுகர்வோரைச் சுண்டி இழுத்து வசூலில் சாதனைகள் பொங்க வசீகரமாக வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு மாறுபட்டதாய், "காக்கைச் சிறகினிலே" தனக்கானதொரு இலக்கியத் தனித்துவத்தை வெளிப்படுத்தி '21-ம் நூற்றாண்டில் இப்படியொரு முயற்சியா?' எனத் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தத் தூண்டுதல் பிரான்சில் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுக் கொடுக்கும் உந்துவிசையை எனக்குள் பிறப்பித்தது.
முதற் தொகுதி சந்தாதாரர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்பின், அனுப்பப்பட்ட இதழுடன் இனிய பரிசாக ஈழத்து நாவலான "லோமியா" எதிர்பாராமல் கிடைக்கப் பெற்றதால் அனைத்து சந்தா உறுப்பினர்களும் நெகிழ்ந்து போனார்கள்.
நுகர்வோரிடமிருந்து மேலும் மேலும் கறந்திட விளையும் உலகில் 'காக்கை'யின் பயணம் வித்தியாசமாக இருக்கிறது. காக்காக் கூட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது!
தொடரும் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துகள் - நல்லவை எங்கு நடந்தாலும் மனமாரப் பாராட்ட வேண்டும்!!
"வாழ்க! வளமுடன்!!" Tweet
No comments:
Post a Comment