Saturday, 28 November 2015

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - போட்டிக்கான காலம் 31.01.2016 வரை நீடிக்கப்படுகிறது

செய்திச் சரம் 13


கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு
- 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' - 


போட்டிக்கான கால நீடிப்பு : 31.01.2016 வரை
போட்டி முடிவு : மார்ச்சு 2016இல் வெளிவரும்

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 
'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' - வள்ளுவராண்டு 2047

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. 

பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. 

உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.

தாயகங்களைவிட்டுப் புலம்பெயர்ந்தவர்களாய் வாழத் தலைப்பட்ட வாழ்வின் கதைகளை பரவலாக எதிர்பார்கிறோம்.

போட்டிக்கான கால நீடிப்பு : 

போட்டி அறிவிக்கப்பட்ட காலம் தொடக்கம் வாசகர்களோடு நிகழ்ந்த உசாவலில் கால அவகாசம் போதாமையை அறிய முடிந்தது. இதனைக் கவனத்தில் கொண்டும் கிபி அரவிந்தன் அவர்களது முதலாவது நினைவு மாதமாக மார்ச்சு 2016 அமையும் பொருத்தப்பாடையும் நிலைநிறுத்தி போட்டிக்கான கால அவகாசத்தை மேலும் இரு மாதங்களுக்கு நீடிப்பதென முடிவாகியுள்ளது. இதனையொட்டிய அறிவிப்புகளை தொடர்ந்து ஊடகங்களில் இடம்பெற ஆவன செய்துள்ளோம்.

எனவே போட்டிக்கான இறுதி நாளாக 31.01.2016 அமைகிறது. பெப்பிரவரி 2016 நடுவர்களது பரிசீலனைக்கு முன் வைக்கப்படும். முடிவுகள் மார்ச்சு 2016 இல் வெளியிடப்படும். 

00000

நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழுவினராக 
மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் (கனடா), 
மதிப்புக்குரிய மு புஸ்பராசன் (இங்கிலாந்து), 
மதிப்பிற்குரிய இளவாலை விஜயேந்திரன் (நோர்வே), 
மதிப்புக்குரிய அ. யேசுராசா (இலங்கை), 
மதிப்பிற்குரிய ஜோ டி குருஸ் (தமிழ்நாடு)
பரிசீலனை செய்வர்.

0- படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:kaakkaicirakinile@gmail.com
0- தலைப்பு: 'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' எனக் குறிப்பிடல் வேண்டும்.
0- படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.01.2016
.........................................................
முதல் பரிசு                      : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு         : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு           : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்


மூன்று ஆறுதல் பரிசுகள்  : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்
...........................................................
இத்தகவல் பரவலான பார்வையாளர்கட்குச் சென்றிட வழி செய்திடுவீர்!
அறிப்பு காக்கைச் சிறகினிலே இதழில் வெளிவந்துள்ளது. பரவலாக பல இதழ்களிலும் வெளிவந்துள்ளது.


தகவல் : முகிலன்
பாரீசு 28.11.2015

No comments:

Post a Comment